நம்மிடம் மிகுதியான தொழில் வளம், உற்பத்தித்திறன், மக்கள் ஜனத்தொகை [ நமது மனித வளம் மாபெரும் இந்தியச் சொத்து ] விநியோக நேர்த்திகள் [ அனகொண்டா ரயில்வே சரக்கு பரிவர்த்தனை ] போன்று பல அம்சங்கள் நம்மிடம் குவிந்துள்ளன.
விஷக் கிருமியை ஒழித்துக் கட்ட வேண்டிய நெருக்கடி இருந்தாலும், அதற்கு நன்றி சொல்ல வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
புயலுக்குப் பின் அமைதி என்பது போல் இந்த அபாயகரமான காலச் சூழலுக்குப் பின் வளமான எதிர்காலம் தான் இந்தியர்களுக்கு, அனைத்து உலக மக்களுக்கும் காத்திருக்கிறது.
எடிட்டர்
21-4-2020