நான் பார்த்த படங்கள்
கடந்த ஆறு மாதங்களாக ஹிந்தி படங்களையே அதிகளவில் பார்த்து வருகிறேன். ஒரு பத்திரிகையாளர் என்ற முறையிலும் பார்க்க வேண்டியுள்ளதால் பல மொழிப்படங்களைப் பார்த்து வருகிறேன். திரைப்படத்துறை சார்ந்த வல்லுனர்களின் மனஓட்டம் எப்படி இருக்கிறது எப்படி மாற்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும் என்பதால் அப்படி. நேற்று 1962 இல் வெளியான பந்த பாசம் படத்தைப் பார்த்தேன். எனக்கு ஒன்பது வயது ஆகியிருந்தபோது பார்த்து அப்போதே ரசித்த படம். பாடல் வரிகள் – கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு காரியம் நடக்கட்டும் துணித்து விடு என்ற பாடல், கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல், அப்போதே எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தப்பாடலை கேட்க வேண்டும் என்பதற்காவே அந்த பந்த பாசம் படத்தை மீண்டும் எனது இன்றைய வயதில் எப்படி ரசிக்க முடிகிறது என்று என்னையே ஆராயவும் பார்த்தேன். இப்போதும் மிகவும் ரசித்தேன். படத்தின் டைட்டில் போடும்போது உதவி இயக்குனர்கள் பெயர் பட்டியலில் கண்டிநியுடி என்ற தலைப்பில் எஸ்.எஸ்.தேவதாஸ் அவர்களின் பெயர் போடப்பட்டிருந்தது. கண்டிநியுடி என்பது மிகவும் கவனமான துறை. அதாவது படத்தில் வரும் ஒவ்வொரு ஷாட் களிலும் தொடர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு அந்தத்துறை உதவி இயக்குனர்களுக்கு இருக்கிறது. இன்றைய இயக்குனர்களுக்கு அது பெரும்பாலும் தெரியாது. மிகப்பிரபலமான இயக்குனர்களுக்கே அது தெரியாது என்பது தான் உண்மை. கண்டிநியுடி பற்றி விரிவாக எழுதுகிறேன்.
எடிட்டர் எஸ்.ராம ஈஸ்வர்லால்