எம் . என்.நம்பியார் குருசாம்யின் நூற்றாண்டு விழாவில்
சென்னை மியுசிக் அகாடமியில் எம் . என்.நம்பியார் குருசாம்யின் நூற்றாண்டு விழா 2019 நவம்பர் 19 அன்று மாலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக்ஹா மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா குரவ அழைப்பாளராக முன்னாள் டி.ஜி.பி.கே.விஜயகுமார் ஐ.பி.எஸ். ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் சிறப்பு ஆலோசகர் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான ஐயப்ப சீடர்கள், திரையுல நடிகர்கள், இயக்குனர்கள், கலைநுட்ப வல்லுனர்கள் ஊடக நட்சத்திரங்கள் பங்கு கொண்டனர்.
பட்டி மன்ற புகழ் பாரதி பாஸ்கர், ரங்கராஜ் பாண்டே, இயக்குனர் வாசு, நடிகர் சிவகுமார் மற்றும் பலரும் பேசினார். எம்.என்.நம்பியார் அவர்களின் வாழ்க்கையோட்டத்தை குறும்படமாக பால அறிய தகவல்களுடன் காண்பிக்கப்பட்டது. 1942 இல் முதல் முறையாக நம்பியார் அவர்கள் அவர் குருசாமியாக ஏற்ற நவாப் ராஜ மாணிக்கம் அவர்களது திருக்கரங்களால் மாலையணிந்து சபரிமலைக்கு செல்ல ஆரம்பித்தார். அப்போது சபரிமலையில் சுமார் ஐம்பது பேர் மட்டுமே இருந்திருக்கிறார்கள். ஐயப்பனின் அருமை பெருமைகளை உணர்ந்த நம்பியார் அவர்கள் சபரிமலைக்கு ஐந்து இலட்சம் பேர் வர வேண்டும் அதற்க்கு தன்னால் முடியக்கூடிய ஒன்றை செய்ய வேண்டும் என்று விரும்பினார். அவர் சார்ந்த திரைப்படத் துறையிலிருந்து பலரையும் அழைத்து வரத் துவங்கினார். இன்று இலட்ச கணக்கில் சபரிமலைக்கு வருகிறார்கள் என்றால் அதில் நம்பியார் அவர்களின் பங்கும் உண்டு என்பதில் மறுப்பு இல்லை. நம்பியார் இல்லத்தில் இந்த ஆண்டு 75 ஆம் ஆண்டு இருமுடி பூஜை நடக்கிறது.அவர் 2003 வரையில் மலைக்கு சென்று வந்தார். அவரது குடும்பமே சபரிமலைக்கு இன்றும் சிறப்பாக, அடக்கமாக, சேவை செய்து வருகிறார்கள். அவரது புதல்வர் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் நம்பியார் பொருப்பேற்று நடத்துகிறார்கள். மகள் வழிப்பேரன் தீபக் அவர்கள் எம்.என்.நம்பியார் சாமி அவர்களைப்பற்றி ஒரு புத்தகத்தை எழுதி சிறப்பித்திருக்கிறார்.