மாப்பிள்ளை ஐயப்பன் அருளால் திருமணம் கை கூட

மாப்பிள்ளை ஐயப்பன் அருளால் திருமணம் கை கூட


மதுரையில் திருவிதாங்கூர் மன்னருக்கு துணி நெய்து தரும் சௌராஷ்டிர இன வியாபாரிகள் இருந்தனர். 


அவர்களில் ஒருவர், அவ்வாறு மதுரையிலிருந்து திருவிதாங்கூருக்கு துணி விற்கச் செல்லும்போது தனது மகள் புஷ்கலையைக் அழைத்துச் சென்றார்.


ஆனால் பாண்டிய நாடு தாண்டி ஆரியங்காவு சென்றதும் புஷ்கலை அடர்ந்த காட்டில் பயணம் செய்ய ஐயம் கொண்டாள். அதனால் வியாபாரி தன் மகளை ஆரியங்காவு ஐயப்பன் கோவில் பூசாரியின் வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். 


புஷ்கலை ஐயப்பன் கோவிலுக்கு வேண்டிய கைங்கரியங்கள் செய்து வர, அவள் ஐயப்பனிடம் கொண்ட பக்தி காதலாக மாறியது.


திருவிதாங்கூரில் தன் வியாபாரத்தை முடித்துவிட்டுத் திரும்பிய வியாபாரியை ஒரு மதயானை துரத்தியது. ஒரு இளைஞன் மதயானையை விரட்டியடித்து, பயந்து ஓடிய அவரைக் காப்பாற்றினான். 


வியாபாரி தன்னைக் காப்பாற்றிய அவ்விளைஞனுக்கு, தன்னால் முடியக்கூடிய  உதவி என்ன என்பதை வினவ, அவன் அவரது மகளைத் தனக்குத் திருமணம் செய்துதரும்படிக் கேட்டான். 


அவரும் அவ்வாறே செய்வதாக உறுதியளித்தார்.


ஆரியங்காவு வந்த வியாபாரி தான் காட்டில் கண்ட இளைஞனின் உருவம் போன்றேயுள்ள ஐயப்பனைக் கோவிலில் கண்டு ஐயப்பனின் கருத்தை உணர்ந்து கொண்டார். 


திருவிதாங்கூர் மன்னரின் சம்மதத்துடன் மதுரையிலிருந்த சொந்தபந்தங்கள் சீர்வரிசை எடுத்துவர ஐயப்பனுக்கும் புஷ்கலைக்கும் திருமணம் ஏற்பாடாகியது. 


ஐயப்பன் நேரில் தோன்றி புஷ்கலையைக் கரம் பற்றியதாக மரபு வழிச் செய்தி கூறுகிறது.


ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இத்திருமண விழா கொண்டாடப்படுகிறது. அவ்விழாவிற்கு இப்பொழுதும் மதுரையில் வாழும் சௌராஷ்டிர இனத்தவர் சீர் எடுத்து வரும் வழக்கம் உள்ளது.


திருமணம் வரன்  அமையாமல் உள்ள மணமக்கள், இந்த பூஜையில் சீர் கொண்டு செல்லும் பூஜைக்கு சிறிது வெல்லமோ சிறிது இனிப்போ கொடுத்து கலந்து கொள்ளுங்கள். 


இந்த வழிபாடு நிகழ்ச்சியில் மனமுருகிப் பிரார்த்தித்து கொள்ளுங்கள்.  நல்ல வரன் அமைந்து விடும்


 மாப்பிள்ளை ஐயப்பன் அருளால்  வாழ்க்கைக்கும் மனதுக்கும் பொருத்மான ஓர் துணை அமைத்துவிடும்


மேற்கொண்டு இந்த சீர் பூஜை நிகழ்ச்சி விபரம் தெரிந்து கொள்ள: 
திரு சோலை அமர்நாத் பாபு +91 93441 21976