என் குருசாமி நம்பியார் அவர்களின் வழிகாட்டுதல் 

என் குருசாமி நம்பியார் அவர்களின் வழிகாட்டுதல்.


முதலாம் ஆண்டில் நான் மலைக்குச் செல்லும்போது எனக்கு [ எங்களுக்கு ] நம் குருசாமி அவர்கள் ஒரு யோசனை சொன்னார்.


அதாவது ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் மலைக்குச் செல்லும்போது எரிமேலியில் தரிசனம் செய்யம் போது கொடி மரத்தின் முன் முதலில் உங்கள் வேண்டுதலை - பிரார்த்தனையை ஆரம்பியுங்கள். அதே பிரார்த்தனையை கல்லிடும்குன்று, அழுதை ஏற்றத்தில், பம்பையில்,பிறகு நீலிமலையில், அப்படியே உயரச் சென்று அய்யன் சந்நிதானத்தில் உள்ள கொடி மரத்தின் முன் கொண்டு சென்று சேர்த்து விடுங்கள். அய்யன் அருளுவார். என்றார்.


நான் அதே போல் செய்திருக்கிறேன்.என்னுடன் வந்தவர்களுக்கும் இதை சொல்லியிருக்கிறேன்.


இப்போது அனைவருக்கும் சொல்லும்  வாய்ப்பும் கிட்டியிருக்கிறது.


ஆன்மிகம் என்பது ஒரு வழிகாட்டி.