இன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. ஐயப்ப பக்தர்கள் துளசிமணி மாலை அணிந்து விரதம் துவக்கும் நன்னாள். சுய கட்டுப்பாடுகளுக்கு பிள்ளையார் சுழி இடும் தினமாகக் கொள்ளலாம்.நான் 1973 இல் முதல் முதலாக கன்னி சாமியாக நம்பியார் குருசாமி அவர்களால் துளசிமணி மாலையணிந்து விரதம் துவக்கினேன் என்பதை நினைவுகூர்கிறேன். என்னால் தொடர்நது முப்பது ஆண்டுகள் மலைக்கு சென்று வர முடிந்ததது.இந்த ஆண்டு நம் குருகுசாமி அவர்களின் நூற்றாண்டு விழா வருகிற 19-11-2019 இல் சென்னை மியூசிக் அகாடமியில் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது.