இவர் இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி ஆடித்தள்ளுபடி ஆஃபர், அள்ளிக்கோ ஷாப்பிங் என சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் துணிக்கடைகளை மொய்க்கத் தொடங்கியுள்ளன மக்கள் கூட்டம். தேவைக்காக ஷாப்பிங் செய்தது மாறி இப்போது போர் அடித்தால் ஷாப்பிங் என்ற அளவிற்கு மக்கள் ஆடம்பரத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். பொருளாதார சூழ்நிலை காரணமாக எளிமையாக இருப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் வசதி படைத்தவர்கள் ஆடம்பரமில்லாமல் இருப்பதை கேட்டால் இன்றைய நவீன உலகில் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா? பணம் கொட்டிக் கிடந்தால் கட்டித் தங்கத்தில் பிளவுஸ், வைரத்தில் செல்போன், ஹேண்ட் பேக் என்று ஃபேஷன் ஃபீரிக்குகளாக வலம் வருபவர்கள் மத்தியில் அமைதி, எளிமையே உருவான சுதா மூர்த்தி நம் மனதை ஆட்கொள்கிறார். இந்தியாவின் டாப் 'ஐ.டி' நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியும், இன்ஃபோசிஸ் பவுண்டேஷனின் தலைவருமான சுதாமூர்த்தி தனித்து அடையாளம் காணப்படுவதற்கும், அவர் மீது தனி மரியாதை ஏற்படுவதற்கும் அவருடைய சாதனைகள் மட்டும் காரணமல்ல. வாழ்க்கையை முற்றிலும் வேறு கோணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுதாவை யாருமே ஆடம்பரமான உடையிலோ அல்லது நகைகள் அணிந்தோ பார்த்ததேயில்லை. சாதாரண காட்டன் புடவையை அணிந்து கொண்டிருக்கும் இவரைப் பார்த்தால் பலருக்கு ஆச்சரியம் ஏற்படும். இதில் பெண்களுக்கு ஷாக் அடிக்கும் மற்றொரு விஷயம் என்ன தெரியுமா? சுதாமூர்த்தி 21 ஆண்டுகளாக ஒரே ஒரு புதுப் புடவை கூட வாங்கியதில்லையாம். இதற்கு அவர் கூறும் காரணம் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கும். "நான் காசிக்கு சென்றிருந்த போது புனித நதியில் நீராடும் போது நமக்குப் பிடித்த எதையாவது விட வேண்டும் என்று சொன்னார்கள். நான்'ஷாப்பிங் செய்வதை விட்டு விடுவதாக, குறிப்பாக சேலைகள் வாங்குவதை விட்டு விடுவதாக, அவசியமானவற்றைத் தவிர வேறு எதையுமே ஷாப்பிங் செய்வதில்லை,” என்கிறார் சுதாமூர்த்தி. நாம் எப்போதுமே பிறருக்காக வாழ்கிறோம். அவர்கள் என்ன நினைப்பார்களோ என்றே பலவற்றை செய்கிறோம். என்னைப் பொருத்தவரையில் அது தேவையில்லை, நாம் நமக்காக வாழ வேண்டும். "எப்போதுமே நான் பிறருக்கு சொல்லும் அறிவுரை எளிமையான வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறதோ அதைச் செய்யுங்கள். மனிதத்தின் அழகு எளிமையான வாழ்க்கையிலும், நம்பிக்கையிலுமே இருக்கிறது. எனவே உங்களுக்காக வாழுங்கள். என் கணவர் நாராயணமூர்த்தியின் எளிமை என்னையும் தொற்றிக் கொண்டது என நினைக்கிறேன். அவர் மிகவும் எளிமையானவர், நேர்மையானவர், எப்போதும் என்னுடைய ஆடை பற்றியோ அழகு பற்றியோ பேசியதே இல்லை . ஆனால் நான் ஒரு நல்ல மனுஷி என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது,” என்கிறார் சுதா . மிகவும் சாதாரணமான புடவை உடுத்தி இருப்பதால், பல நேரங்களில் சுதாவை பலர் குறைத்து மதிப்பிட்டிருக்கிறார்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளை சந்தித்த போதும், சுதாவின் உறுதியை அசைக்க முடியவில்லை சங்கடப்பட்டுக் கொண்டு தனது வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொள்ளாமல், தனக்கு பிடித்தது போலவே எளிமையாகவே இன்றளவும் வாழ்ந்து வருகிறார் 68 வயதான சுதா. ஒரு முறை விமான பயணத்திற்காக பிசினஸ் கிளாஸ் வகுப்பினருக்கான வரிசையில் சுதா காத்திருந்த போது, அந்த வரிசையில் நின்றிருந்த பணக்கார பெண்மணி ஒருவர் இது வசதி படைத்தவர்கள் செல்லும் வரிசை நீங்கள் 'கேட்டில் கிளாஸ்' (cattle class) வரிசைக்குச் செல்லுங்கள் என்று ஏளனம் செய்துள்ளார். தனது எளிமையான ஆடையை பார்த்து அவர் இவ்வாறு இகழ்வதை புரிந்து கொண்ட சுதா, அமைதியை மட்டுமே அந்த சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள், (ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் காவலரும், சுதந்திரப் போராட்ட வீரரும், நவீன மதுரை நகரச் சிற்பியுமான) எல். கே.துளசிராமன் வாழ்க்கை வரலாறு போன்ற சிறந்த வரலாற்று நூல்களைப் படைத்த மூத்த பத்திரிக்கையாளர் திரு. வி. என். சுவாமி அவர்கள் எழுதிய விடுதலைப் போரில் பழங்குடி மக்கள், சுதந்திரப் போராட்டத்தில் சௌராஷ்ட்ரர் நூல்களை, 2.10.2019 அன்று சென்னை , சேப்பாக்கம்சேப்பாக்கம், பத்திரிகையாளர்கள் மன்றத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு பாண்டியராஜன் தலைமை தாங்கி வெளியிட்டார். பெருநகரச் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் மாண்புமிகு சைதை சா. துரைசாமி அவர்கள் முதல் படியையும், சௌராஷ்ட்ர மத்திய சபைத் தலைவர் பரீ ராம் சேகர் அவர்கள் இரண்டாவது படியையும் பெற்றுக் கொண்டனர். முன்னாள் அமைச்சர் மாண்புமிகு எஸ். ஆர். இராதா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி. எஸ். - ஞானதேசிகன், மூத்த பத்திரிக்கையாளர் திரு. இராம்தாஸ், துக்ளக் பத்திரிகை நிருபர் திரு.ரமேஷ் ஆகியோர் நூலாசிரியரை வாழ்த்திச் சிறப்பபுரை ஆற்றினர். பின் நூலாசிரியர் திரு. வி.என்.சாமி ஏற்புரை ஆற்றினார். இறுதியாக, திரு.கமலேஷ் சேதுபதி நன்றி கூற, கூட்டம் முடிந்தது.