கீழடியின் மீட்பர் அமர்நாத் ராமகிருஷ்ணன்.

இந்திய தொல்லியல் துறை மொத்தம் 6 பகுதிகளில் இயங்குகிறது. மொத்தம் உள்ள 6 பகுதிகளில் 5 வட இந்தியாவிலும் போனால் போகட்டும் என்று 1 மட்டும் தென் இந்தியாவிலும் (மைசூர்) அமைக்கப்பட்டிருக்கிறது ( உபயம் - கதர் களவாணி காங்கிரஸ்) இருப்பதிலேயே மிகச்சிறிய யூனிட் மைசூர் யூனிட். மொத்தமாக 30 தொல்லியல் ஆய்வாளர்கள்கூட இல்லாத மைசூர் யூனிட்டின் தலைவராக இருந்தார் திருவாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன். அவர் தலைமையிலான குழுவினரை அழைத்துக் கொண்டு வைகைக் கரையில் தொல்லியல் ஆய்வை மேற்கொள்ள கிராமம் கிராமமாக சென்றார். வைகை ஆற்றின் இரு கரைகளிலிருந்தும் 10 கி.மீ தூரம் சுற்றளவுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக தங்களின் தேடலை தொடர்ந்து நடத்தினார். அப்போது கிடைத்ததுதான் கீழடி. இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுதக்கூடிய ஒரு நதிக்கரை நகரம் கீழடியில் புதைந்திருப்பதை கண்டார். நகர நாகரிகம், பண்டைய ரோமானிய, எகிப்திய நாடுகளோடு வாணிபம் நடந்ததற்கான ஆதாரங்கள், அதைவிட முக்கியமாக அங்கு தமிழ் தமிழியாக எழுத்து வடிவில், குறியீட்டு வடிவில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதுவரை இந்தியாவின் எழுத்து வரலாறு கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து அசோகர் கால கல்வெட்டுகள் மூலம் 'பிரம்மி' எழுத்தாக தொடங்கியது, என ஆங்கிலேயர்கள் கற்பித்துவிட்டுப்போன இந்திய மொழிகளின் வரலாற்றை புரட்டிப்போட்டது கீழடி. ஆம். பிரம்மியையும், தேவ நகரியையும் தூக்கிப் பிடிப்பவர்களின் தலையில் பேரிடியாக விழுந்தது 'தமிழி'. 'பிரம்மி' என்ற வார்த்தை ஆங்கிலேயர் கொடுத்தது. அதுவும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளுக்கு கொடுத்த வார்த்தை 'பிரம்மி எழுத்துரு'. 'பிரம்மி' எழுத்துருவுக்கும் முன்பே வைகைக்கரையில் வேறொரு எழுத்துரு இருந்துள்ளது. தமிழ் பிரம்மி எனப்படும் 'தமிழி' தமிழியை விடவும் இன்னொன்று 'மேலிடத்தை' ஆத்திரப்படுத்தியது. 2600 ஆண்டுகளுக்கு முன்பு எந்தவொரு மத அடையாள சின்னங்களும் கீழடியில் கிடைக்கவில்லை என்பதே அது. முதல் மற்றும் இரண்டாம் அகழாய்வுகளின் மூலம் சுமார் 5000 பொருட்களுக்கும் மேல் கீழடியிலிருந்து தோண்டியெடுத்தார் அமர்நாத். அவரை அறிக்கை தயாரிக்காமல் அங்கிருந்து கிளம்பும்படி உத்தரவிட்டார்கள். அமர்நாத் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். அவர் போகும் போது கீழடியை குறித்து உண்மையை சொல்லிவிட்டு கிளம்பினார். அவர் கண்டெடுத்த 5000 பொருட்களில் ஒன்றுகூட வந்தது காலத்தை கணக்கிட உதவும் கார்பன் தமிழக பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை. கட்ட கீழடியின் முதல் இரு அகழாய்வுகளின் அறிக்கையை மறுதினத்துடன் வெளியிடாமல் அதை அப்படியே மூட கீழடி ஓராண்டுக்குள் மூன்றாம் கட்ட அகழாய்வு என்ற ஒரு 'டிராமா' வரும்போடப்பட்டது. முன்னோக்கி அமர்நாத்தை அஸ்ஸாமுக்கு மாற்றிவிட்டு அந்த இதற்கெல்லாம் அவரைவிட பதவியில் ஜூனியரான என்பவரை ராஜஸ்தானிலிருந்து ஸ்ரீராம் ஷர்மா என்பவரை ராஜஸ்தானிலிருந்து இறக்குமதி செய்தார்கள். ஷர்மா சார்வாள் மூன்றாம் கட்ட அகழாய்வை முடித்துவிட்டு கீழடியில் எதுவும் இல்லை என்றார். முதலிரண்டு அகழாய்வுக்கு வராத குரல் மூன்றாம் அகழாய்வுக்கு வந்தது. அமர்நாத் அவர்களால் பற்ற வைக்கப்பட்டிருந்த நெருப்பு இப்போது எரியத் தொடங்கியது. தமிழ் ஆர்வலர்கள் போராடினர். வழக்கறிஞர் கனிமொழி மதி நீதிமன்றத்தின் மூலம் அமர்நாத் அவர்களை அஸ்ஸாமிலிருந்து கீழடிக்கு கொண்டு வந்தார். முதலிரண்டு அகழாய்வு முடிவுகளை கொடுக்கவும், 4ஆம் கட்ட கீழடி அகழாய்வை மேற்கொள்ள அனுமதியையும், நிதியையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. தமிழ் ஆர்வலர்களின் வலியுறுத்தலை ஏற்று தமிழக தமிழ் ஆர்வலர்களின் வலியுறுத்தலை ஏற்று தமிழக தன் சொந்த செலவில் கீழடி நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வை மேற்கொள்ளும் என அறிவித்தது. 2017 - 2018ல் கீழடி நான்காம் அகழாய்வை முடித்து அதில் கிடைத்த பொருட்களில் 6 மாதிரிகளை அமெரிக்காவிற்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பிய தமிழக அதன் முடிவுகள் கீழடியின் வயது கி.மு 6ஆம் நூற்றாண்டு என சொல்ல அதையே தனது ஆய்வு அறிக்கையாக உலகின் பார்வைக்கு கொண்டு வந்தது தமிழக அரசு. தமிழக அரசின் சார்பில் கீழடியில் நிகழும் 5ஆம் கட்ட அகழாய்வு (2018-2019) நாளை மறுதினத்துடன் முடிகிறது (செப் 30). ஓராண்டுக்குள் இந்த அகழாய்வின் அறிக்கையும் வரும். அதில் கீழடியின் வயது இன்னும் முன்னோக்கி செல்லக்கூடும். இதற்கெல்லாம் விதை போட்டவர் திருவாளர் அமர்நாத் ராமகிருண்ணன். இவர் தாய் மொழி சௌராஷ்டிரா. ஈராயிரம் ஆண்டுகளையும் தாண்டி பூமிக்குள் உறங்கிக் கொண்டிருந்த கீழடியை உயிர்ப்பித்த மீட்பர் இவர். அவரின் முதல் இரண்டு அகழாய்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படாதது அவருக்கு மட்டும் வருத்தமான செய்தி அல்ல. ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் ஏற்பட்டிருக்கும் ஏமாற்றம், அநீதி. #கீழடியின் நிகழ்கால வரலாறு இவரை எப்போதும் நன்றியோடு நினைவுகூறட்டும். - Nambikai ra] திரு. சுந்தர் நத்தமன் அவர்களின் முகநூல் பதிவு.