நமது சமூகத்தைச் சார்ந்த சேலம் வழக்குரைஞருக்கு சர்வதேச விருது

சலத்தைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞரும் சட்டத் தமிழ் நூலாசிரியருமான ஆர்.ஜெயராஜன் அவர்களுக்கு தமிழ் மொழி வளர்ச்சிக்காக அண்மையில் சர்வதேச விருது ருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் நமது சமூகத்தைச் சார்ந்த வழக்குரைஞர் ஆர்.ஜெயராஜனுக்கு "உலக சூர்ய வர்மன்" விருது வழங்கப்பட்டது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் உள்ள சியம் ரீப் நகரில் 2 தினங்கள் நடந்த இம்மாநாட்டின் ஓர் அங்கமாக தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் தொண்டாற்றிய அறிஞர்கள் மற்றும் கவிஞர்களுக்கு கம்போடிய அரசு விருது வழங்கி கௌரவித்தது. இதில் சட்டத்தமிம் எனும் தனித்தமிழ் வளர்ச்சிக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ழுத்து , பேச்சு மற்றும் ஆராய்ச்சியின் வாயிலாக பாடு பட்டு வரும் சேலம் வழக்குரைஞர் ஜெயராஜனுக்கு தமிழ் மொழி மேம்பாட்டிற்கான கம்போடிய அரசின் "உலக சூர்யவர்மன்" விருதை அந்நாட்டின் கலாச்சாரம்மற்றும் நுண்கலைகள் துறையின் இயக்குநர் திரு. மோர்ன் சோப்பீப் வழங்கி கௌரவித்தார்சட்டக்கல்வியாளர் ஜெய ராஜன் அவர்கள் 56 க்கும் அதிகமான சட்டத்தமிழ் நூல்களை இயற்றியவர் என்பதும், அவற்றில் இரண்டு நூல்கள் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்களுக்கான பரிசும் பாராட்டி தழும் பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அகில இந்திய விருதுகள் பலவற்றைப் பெற்ற இவர், தமிழ் மொழி வளர்ச்சிக்காக அயல்நாட்டு விருது ஒன் ஒன்றைப் பெறுவது இதுவே முதன்முறை. கம்போடிய அரசுடன் சேர்ந்து அங்கோர் தமிழ்ச் சங்கம் மற்றும் பன்னாட்டு தமிழர் நடுவம் இணைந்து நடத்திய இந்த மாநாட்டில், "எனக்கு இறக்கை முளைத்து விட்டது" என்ற தலைப்பில் இவர் படைத்த யதார்த்த கவிதை, உலகக் கவி ஞர்கள் அனைவரது பாராட்டையும் பெற்றது. இம்மாநாட்டில் 40க்கும் அதிகமான நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள், கவிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.